சர்க்கரை நோயாளிகள் டயட்டில் சேர்த்துக் கொள்ளக் கூடியதாக ரூட் வெஜிடபிள் என அழைக்கப்படும் வேர் காய்கறிகள் இருக்கின்றன. இந்த காய்கறிகள் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட்களை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் டர்னிப், நூற்கோல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். கேரட் மற்றும் பீட்ரூட் இரண்டையும் அளவோடு எடுத்துக் கொள்ளலாம். இந்த காய்கறிகளை உணவாகவோ அல்லது சூப் போலவும் செய்து சாப்பிடலாம்.