அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் கொடுத்துள்ள அப்டேட் தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற செய்துள்ளது. அவர் தனது ட்வீட்டில், ‘தென்னிந்தியாவையே கலக்கப்போகும் Collab லோடிங்.. நாளைக்கு’ என ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து, அனிருத்துடன் இணையப்போகும் அந்த மற்றொருவர் யார்? என்ற கேள்வியும், இது அவரின் கமிட் ஆன படத்தின் அப்டேட்டா? இல்லை புதிய படம் குறித்த அறிவிப்பா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.