ஜிம் உரிமையாளரிடம் ரூ. 11. 50 லட்சம் மோசடி

78பார்த்தது
ஜிம் உரிமையாளரிடம் ரூ. 11. 50 லட்சம் மோசடி
கோவை கணுவாய் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(34). ஜிம் நடத்தி வருகிறார். இவரிடம் தொண்டாமுத்தூர் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த கவுதம்(26), உட்பட சிலர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிகமாக லாபம் கிடைக்கும் எனவும், தங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தினால், நாங்கள் அதனை பங்கு சந்தையில் முதலீடு செய்து லாப தொகையை தந்து விடுவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய தண்டபாணி அவர்களின் வங்கி கணக்கில் சிறிது, சிறிதாக ரூ. 11. 50 லட்சம் அனுப்பினார். ஆனால் அவருக்கு எந்த விதமான லாப தொகையும் கிடைக்க வில்லை. அவர்களிடம் கேட்டபோது, காலம் கடத்தி வந்தனர். முறையான பதில் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தண்டபாணி இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் மோசடி செய்தது தொண்டாமுத்தூர் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த கவுதம், கல்யாணி(58), தமிழ்செல்வி(47) மற்றும் ஹரீஸ் என்பது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி