கோவை: மாநகராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

55பார்த்தது
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாண்புமிகு மேயர் திருமதி. கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. ரா. வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி. அ. சுல்தானா, திரு. த. குமரேசன், மண்டல குழுத்தலைவர் திருமதி. இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), நகரமைப்புக்குழு தலைவர் திரு. சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), மாநகர தலைமை பொறியாளர் (பொ) திரு. முருகேசன், நகரமைப்பு அலுவலர் திரு. குமார், உதவி ஆணையர்கள் திருமதி. மோகனசுந்தரி(நிர்வாகம்), திரு. துரைமுருகன்(மேற்கு), உதவி நகர்நல அலுவலர் மரு. பூபதி, மாநகர கல்வி அலுவலர் திரு. குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் திரு. பூபதி, திரு. பிரவீண்ராஜ், திருமதி. கமலாவதி போஸ், உதவி செயற்பொறியாளர்கள் திருமதி. ஹேமலதா, திரு. முத்துக்குமார் (பொ) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், தேசிய ஒருமைப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் வலியுறுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி