திருவண்ணாமலை: சாத்தனூர் அணையிலிருந்து 2025ஆம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் பாசன நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 320 கனஅடி மற்றும் 200 கனஅடி என மொத்தம் 520 கனஅடி வீதம் நாளை (ஜன., 27) முதல் 17.05.2025 வரை 110 நாட்களுக்கு தொடர்ச்சியாக 4,94,200 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சாத்தனூர் பாசனப்பரப்பு 45,000 ஏக்கர் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பரப்பு 5000 ஏக்கர் என மொத்தம் 50,000 ஏக்கர் பயன்பெறும்.