உலகின் மிகப்பெரிய ஆறாக அறியப்படும் அமேசான் நதி 6,400 கி.மீ வரை பாய்கிறது. சில இடங்களில் இந்த நதியின் அகலம் 11 கி.மீ-க்கும் அதிகமாக உள்ளது. இது 9 நாடுகளில் பாய்ந்து பல மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த நதியில் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குச் செல்ல எந்த ஒரு பாலமும் இல்லை. அதற்கு முக்கிய காரணம் அமேசான் நதிக்கு அருகில் உள்ள சதுப்பு நிலங்கள் பாலம் கட்டுவதற்கு சவாலாக உள்ளது தான்.