தமிழ்நாட்டில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்னும் இரு நாட்களில் விடைபெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மாநிலத்தில் கடந்தாண்டு அக். 15ம் தேதி தொடங்கிய நிலையில் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஃபென்ஜால் புயல் உள்ளிட்ட காரணங்களால் பரவலாக மழை வெளுத்து வாங்கியது. 2024-ல் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 33 சதவீதம் அதிகமாக இருந்ததை தமிழகம் கண்டது.