தமிழக அரசை கண்டித்து நாளை (மார்ச் 22) போராட்டம் நடத்த இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். “குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்!” என குறிப்பிட்டு அவர் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் அதில், “தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை, படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை. திமுக அரசை கண்டித்து நாளை காலை 10 மணிக்கு, பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.