திமுக MP ஆ.ராசா மீதான வழக்கு ரத்து

61பார்த்தது
திமுக MP ஆ.ராசா மீதான வழக்கு ரத்து
திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா எம்.பி., மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக்கோரி தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆ.ராசா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அன்றைய அதிமுக அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடர்ந்ததாக ஆ.ராசா தரப்பு வாதம் முன்வைத்தது. இதனை தொடர்ந்து இவ்வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.

தொடர்புடைய செய்தி