கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு தேவையில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மக்களுக்காக வந்திருக்கிறேன் அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
எனக்கு எதற்கு பாதுகாப்பு என்றுதான் காவலர்களிடம் நான் கேட்பேன். விஜய் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு தேவை தான், அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார் என்று கூறினார். அண்ணாமலை குண்டுவெடிப்பு நினைவஞ்சலி கூட்டத்தில் பேசும்போது பாஷாவை அப்பா என்று சீமான் அழைத்தார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்ற கேள்விக்கு, குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றவரை இவர் எப்படி பார்க்கிறார்? , குஜராத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு அப்பா அம்மா இருக்கிறார்களா? இல்லையா? , ஈழத்தில் இறந்தவர்களுக்கு அப்பா அம்மா இல்லையா? , அவர்களைப் பற்றி எல்லாம் உங்களின் கருத்து என்ன?. அந்த இலங்கை இப்போது உங்களுக்கு நட்பு நாடாக இருக்கிறதே எப்படி?. மணிப்பூர் கலவரத்தில் கொன்று ஒழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.