கோவை கோர்ட் ஊழியர் தற்கொலை

81பார்த்தது
கோவை கோர்ட் ஊழியர் தற்கொலை
கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சந்திரசேகர்(50). இவர் கோவை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பூங்கொடி நேற்று தனது மகள் மற்றும் மகனுடன் சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். வீட்டில் சந்திரசேகர் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், உறவினர் ஒருவர் அவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். அவர் சந்திரசேகர் தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சந்திரசேகர் மனைவி பூங்கொடி மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த சந்திரசேகர் மனைவி மற்றும் பிள்ளைகள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி