கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் தினமும் கழுதை பால் விற்று ரூ.1,500 முதல் ரூ.2000 வரை சம்பாதித்து வருகிறார். 'நீயெல்லாம் கழுதை மேய்க்கதான் லாயக்கு' என பெரியவர்கள் திட்டுவதை நாம் பார்த்திருப்போம். அதையே நிஜமாக்கிய கண்ணன், கழுதை பால் விற்று மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக கூறுகிறார். தற்போது ஒரு சங்கு கழுதை பால் ( 10 மில்லி முதல் 15 மில்லி வரை இருக்கும்) 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.