வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப காப்பீடு கட்டாயமாக்கபடும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் கார் பைக் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் 3rd Party Insurance கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலுள்ள 50% வாகனங்கள் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், வாகனங்களுக்கு பெட்ரோல்/டீசல் நிரப்ப, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க, FASTag பெறுவது போன்ற செயல்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.