அகழாய்வில் சுடுமண்ணால் ஆன மனித கால்கள் கண்டெடுப்பு

70பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 3,250-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் கூடுதலாக சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ பொம்மையின் கால் பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளன. மேலும் சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்தும் சிறிய அளவிலான மண் குடுவைகளும், வெள்ளை நிற சங்கு வளையல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி