அப்பளம் இல்லாத உணவு பலருக்கும் முழுமை பெறாது. ருசியை அதிகரிக்கும் அப்பளம் உடல்நலம், ஆரோக்கியத்தில் தாக்கம் உண்டாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு, இதய நோய் பாதிப்புக்கு வழிவகுக்கும். அப்பளம் வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் ஏற்படவும் காரணமாக உள்ளது.