மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அதிமுக,கொடி கம்பம் நட அனுமதி கோரி, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜன.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கட்சி, சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை, 12 வாரங்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.