பெங்களூரு: சாப்ட்வேர் மற்றும் ஹேக்கிங் போன்றவற்றை நன்கு அறிந்த ஒரு ஐடி ஊழியரே, சைபர் குற்றவாளிகளால் ஒரே நாளில் 12 கோடியை இழந்துள்ளார். கடந்த நவ. 11-ல் ஐடி ஊழியரை தொடர்பு கொண்ட நபர், உங்களின் செல்போன் எண் தவறான காரியத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி அவரை பதட்டத்திற்கு உள்ளாக்கி மோசடி செய்திருக்கிறார். இது குறித்த புகாரை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.