புரோ கபடி: ஜெய்ப்பூர், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி

60பார்த்தது
புரோ கபடி: ஜெய்ப்பூர், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி
புரோ கபடி 11ஆவது லீக் தொடரின் 3ஆவது கட்ட ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (டிச.20) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 31-28 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 48-36 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி