திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு, பக்தர்கள் தனியார் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, ஆற்காடு அருகே உள்ள முப்பது வெட்டி பகுதியில், டீ அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. தாழ்வாக சென்ற மின்கம்பி மீது பேருந்து உரசியதால், பேருந்தின் உள்ளே மின்சாரம் பாய்ந்தது. இதில், அகல்யா என்ற பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.