திருநெல்வேலி: மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தின் சாதகமான நீர்நிலையை கருத்தில் கொண்டு நடப்பாண்டிற்கான (2024-2025) பாசனப்பரப்புகளுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 23.12.2024 முதல் 31.03.2025 முடிய (99 நாட்கள்) நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், திருவைகுண்டம், திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள 12.018 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.