பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச., 21) இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். குவைத் மன்னர் ஷேக் மெஷல் சபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது குவைத் தலைமை அதிகாரிகள், இந்தியர்களுடன் மோடி கலந்துரையாடுவார். இந்தியாவுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் உள்ளிட்டவற்றில் குவைத் முக்கிய அங்கம் வகிக்கிறது. கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும்.