கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், போதை பொருள் தடுப்பு மற்றும் மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில், போதை பொருள் தடுப்பு மற்றும் மது விலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஜேம்ஸ் மற்றும் காவலர்கள் கோவில் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாத பிள்ளையார் கோவில் அருகே நேற்று சோதனை செய்தனர்.
அப்போது ஒடிசாவை சேர்ந்த சுனந்தா சாகு என்ற பெண் தடை செய்யப்பட்ட 360 கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சுனந்தா சாகுவை கைது செய்து, அவரிடமிருந்த 360 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சுனந்தா சாகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.