கோட்டை பிரிவு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!

71பார்த்தது
கோவையை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று கோவையில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. மாலை நேரத்தில் கோவையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே மாலை 6 மணி முதல் பெய்த கனமழையால் பொதுமக்களும் பயணிகளும் வெளியே செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர். கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மத்தம்பாளையம் அருகே கோட்டை பிரிவு பகுதியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வழியில் எருமைப்பள்ளம் என்ற பள்ளம் உள்ளது. மழை காலங்களில் இந்த பள்ளத்தின் வழியாக மழைநீர் வெள்ளம் போல பாயும். நேற்று பெய்த கனமழையால் அந்தப் பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது அந்த வழியாக வந்த இரண்டு கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த கார்கள் தலைகீழாக விழுந்த காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் தற்போது கோவையில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கார்களில் சிக்கியிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி