மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

80பார்த்தது
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து சனியன்று கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கே. சாமிநாதன் கண்டன உரை நிகழ்த்தினார்.

மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் அதிக வரி செலுத்தும் மாநிலமான தமிழ்நாடு புறக்கணிப்பு, கோவை தொழில் துறையின் கோரிக்கைகள் நிராகரிப்பு, கோவை மெட்ரோ ரயிலுக்கு நிதி ஒதுக்க மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்தும், விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி