வங்கதேசத்தில் 2 நாட்களில் 8 கோயில் சிலைகள் சேதம்

56பார்த்தது
வங்கதேசத்தில் 2 நாட்களில் 8 கோயில் சிலைகள் சேதம்
வங்கதேசத்தின் மைமென்சிங் மற்றும் தினாஜ்பூரில் உள்ள மூன்று இந்து கோயில்களில் உள்ள எட்டு சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கோயிலில் நாசவேலையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தில் சிறுபான்மை இந்து சமூகத்திற்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய சம்பவம் மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு சம்பவத்தில், பொலஷ்கந்தா காளி கோயிலில் உள்ள சிலையை சிலர் வியாழக்கிழமை சேதப்படுத்தியிருந்தனர்.

தொடர்புடைய செய்தி