தஞ்சாவூர்: திருவையாறு அருகே தீயணைப்புது துறையில் பணியாற்றி வந்தவர் விக்னேஷ் (29). இவர், கடந்த 19ஆம் தேதி தனக்கு திருமணம் செய்துவைக்க கோரி தந்தை சேகரிடம் (55) வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ், தந்தையை அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து, தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயம் அடைந்த விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். தந்தை தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.