தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் அல் அமீன், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், அல் அமீன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.