திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு தனது மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த குமாரசாமி (53) என்பரை, தந்தை நடராஜ் (55) படுகொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாராபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி மகளை காதலனுடன் சேர்த்து வைத்ததால் ஆத்திரமடைந்த தந்தை, கடப்பாரையால் அடித்துக் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.