காஞ்சிபுரம்: திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச் சென்ற தினேஷ் என்பவர் உண்டியலில் பணம் போட முயன்ற போது ஐபோனை தவறவிட்டார். இதுகுறித்து கேட்டதற்கு, ‘உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது’ என கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர், இந்து சமய அறநிலையத்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், “சாத்தியக்கூறு இருந்தால் ஐபோன் திருப்பி வழங்கப்படும்" என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.