யூனியன் வங்கி எஸ். சி/எஸ். டி நலச்சங்கம் தமிழ்நாடு சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை வடகோவை பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மாவட்டம் பிராந்திய தலைவர் எஸ். எஸ் லாவண்யா, இயக்குனர் கும்ஹிகண்ணன், துணைத் தலைவர்கள் மகாதேவ் என் மோக்கர், முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமார் 100 மாணவர்களுக்கு உபகரண பொருட்ககளை வழங்கினார். இதில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா எஸ். சி/எஸ். டி நலச்சங்க தமிழ்நாடு தலைவர் விவேகானந்தன், பொதுச் செயலாளர்கள் ராகுல், சண்முகசுந்தரம், பட்டியல் கணக்காளர் முருகேசன், பொருளாளர் குப்புசாமி, கோவை மாவட்ட மண்டல செயலாளர் மாரிமுத்து மற்றும் யூனியன் பேங்க் எஸ்சி எஸ் டி நலச்சங்க தமிழ்நாடு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.