விருகம்பாக்கம் - Virugampakkam

சென்னை: நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு: போலீஸார் விசாரணை

நடிகை சீதாவின் வீட்டில் 4 1/2 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் 'ஆண்பாவம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சீதா. விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். பின்னர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.  தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் சீதா, விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, தனது தம்பியின் மனைவி கல்பனா, விசேஷம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அவர், அணிந்திருந்த 4 1/2 பவுன் நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு உறங்கிவிட்டார். பின்னர், எழுந்து பார்த்தபோது அந்த நகைகள் மாயமாகி விட்டன. எனவே தனது வீட்டில் திருடு போன அந்த நகையை கண்டுபிடித்து தரவேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.  இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நகை திருடியவரை தேடி வருகின்றனர். மேலும் சீதா வீட்டில் வேலை பார்த்து வரும் பணிப்பெண்ணிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


சென்னை
Nov 22, 2024, 10:11 IST/துறைமுகம்
துறைமுகம்

பட்டாபிராமில் டைடல் பூங்கா: முதல்வர் திறந்துவைத்தார்

Nov 22, 2024, 10:11 IST
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ. 330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் வடபகுதியிலுள்ள நகரங்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11. 41 ஏக்கர் பரப்பளவில், ரூ. 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5. 57 லட்சம் சதுரடி பரப்பளவில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்கா தமிழக முதல்வரால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.