செல்போன் திருட்டில் ஈடுபட்டதால் கைதான 19 வயது இளைஞருக்கு, உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இன்று (நவ.22) நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையின்போது, “முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். பல பொய் வழக்குகளை புனைந்து ஒரு கூட்டத்தின் தலைவனாக்கி விடக்கூடாது” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.