ஆதம்பாக்கம் ஏரியில் முதியவர் ஒருவரின் உடல் மிதப்பதாக, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தவர் ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம் 2வது தெருவைச் சேர்ந்த ராமையா, 70, என்பது தெரியவந்தது. அவரது இறப்பு குறித்து, ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.