நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமிக்கு மார்ச் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ல் சினேகம் அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாக ஜெயலட்சுமி மீது பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இவ்வழக்கில் இன்று காலை ஜெயலட்சுமி வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.