சென்னை கோயம்பேட்டில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பூண்டு விலை ரூ. 100-க்குக் கீழ் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் முதல் ரக பூண்டு ஒரு கிலோ ரூ. 90க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-ம் ரக பூண்டு ரூ. 80-க்கும், 3-ம் ரக பூண்டு ஒரு கிலோ ரூ. 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கிலோ பூண்டு ரூ. 400 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.