ஈஞ்சம்பாக்கம்: கார் கவிழ்ந்து விபத்து
சென்னை: ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கே. கே. நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன், (28). இவர், நேற்று(அக்.20) அதிகாலை, 'மாருதி' காரில் நண்பர்கள் இரண்டு பேருடன், திருவான்மியூரில் இருந்து கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில், கட்டுப்பாட்டை இழந்த கார், மின்கம்பத்தில் மோதி, தலைகீழாக கவிழ்ந்தது. இதில், மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.