விமான நிலையம்: வெளிநாட்டு உயிரினங்கள் பறிமுதல்

62பார்த்தது
விமான நிலையம்: வெளிநாட்டு உயிரினங்கள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ஆப்பிரிக்கா நாட்டின் 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மலேசியாவில் இருந்துகடத்தி வந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்துவிமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிகொண்டிருந்தனர். அப்போது சுற்றுலாப் பயணியாக இங்கு வந்த பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர் கொண்டு வந்திருந்தபிளாஸ்டிக் கூடைகளை திறந்து அதிகாரிகள்சோதனை செய்தனர். அதில், ஆப்பிரிக்க நாட்டுபச்சோந்திகள் (Green Iguana) 52 மற்றும் ஜியாமங்க் ஜிப்பான் என்ற ஆப்பிரிக்க கருங்குரங்குகள் 4 உயிருடன் இருந்தன.

இதுபற்றி சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த அதிகாரிகள் உயிரினங்களை ஆய்வு செய்து, அந்த பெண்ணை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, உயிரினங்களை வாங்கிச் செல்வதற்காக விமான நிலையம் வெளியே இருந்த ஆண் நபர் ஒருவரும்கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி