சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு இன்று (அக். , 21) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
விமானங்களுக்கு சமீபகாலமாக அதிகரித்து வரும் வெடிகுண்டு மிரட்டலால், பயணியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். தொலைபேசி, இ - மெயில் வாயிலாக மிரட்டல் விடுத்து வந்த நபர்கள், சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக மிரட்டல் விடுக்கின்றனர். கடந்த சில தினங்களில் மட்டும் 100 மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.
விமானங்களை தொடர்ந்து, இன்று (அக். , 21) சென்னை, திருச்சி, மும்பை விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அதிகாரிகள் சோதனையில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.