பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை விவகாரம்: ஒருவர் கைது
சென்னை மணலியைச் சேர்ந்த திருமணம் ஆகாத இளம் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து சாலையில் வீசிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் இன்று (செப்.19) நடந்துள்ளது. இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார், ஒருவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மணலியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக பாலியல் தொழில் தரகர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் ஒருவரை கொலை செய்து கண்டம் துண்டமாக வெட்டி சூட்கேஸில் அடைத்து வீசிச் சென்ற சம்பவம் துரைப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.