‘NPS வாத்சல்யா’ திட்டத்தில் ஒரு பெற்றோர் மாதம் ரூ.1,000-ஐ 18 வருடங்களுக்கு முதலீடு செய்தால், 18 வருடத்தில் ரூ.2,16,000 முதலீடு செய்திருப்பார்கள். அதற்கு வட்டியாக ரூ.6,32,718 கிடைக்கும். 18 வயது முடியும் பொழுது, மொத்த கார்ப்பஸ் ரூ.8,48,00 ரூபாயாக இருக்கும். விதிமுறைகளின் படி 80% மறு முதலீடு செய்ய வேண்டும். அதாவது ரூ.6,78,400 மறுமுதலீடு செய்து, ரூ.1,69,600 திரும்ப பெற முடியும். மறு முதலீடு செய்யப்படும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.