அதிமுக பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி

56பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ. பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே. சி. டி. பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதி சி. வி. கார்த்திகேயன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜலட்சுமி, இளம்பாரதி ஆகியோர் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் பழனிசாமி தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எனக்கூறி பதில் மனு தாக்கல் செய்துள்ளார் எனக் குற்றம் சாட்டினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி