சென்னை மாநகராட்சி சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று(செப்.27) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர். பிரியா தலைமையில், துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் ஆர். லலிதா ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாநகரில் உள்ள 291 அம்மா உணவகங்களை ரூ. 17 கோடியில் சீரமைக்கவும், 81 இடங்களில் ரூ. 12 கோடியில் 3டி மாடல் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும் இன்றைய கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க விதிக்கப்படும் அபராதம் ரூ. 500 இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தவும், தேனாம்பேட்டை மண்டலம் 110-வது வார்டில் காம்தார் நகர் மெயின் ரோடு பிரபல திரை இசை பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியன் பெயரை சூட்டவும் மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மொத்தம் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.