திருவள்ளூர்: ரூ.330 கோடி செலவில் புதிய டைடல் பூங்கா
.திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் புதிய டைடல் பூங்கா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (நவ.,22) திறந்து வைக்கிறார். இக்கட்டிடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயர் அழுத்த மும்முனை மின் இணைப்பு, மின் இயக்கி வசதிகள், மின் தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.