திருவள்ளூர் திருப்பாச்சூர் மணவாளநகர் வேடங்கிநல்லூர் ஈக்காடு காக்கலூர் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்தது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் எஸ் பி அலுவலகம் அருகிலேயே மின்கம்பம் உடைந்து இ சேவை மையம் ஓட்டல் உள்ளிட்ட கடைகளின் மீது மின்சாரக் கம்பிகள் அறுந்து தொங்கியது இதனால் கடைகளில் இருந்த இரும்பு தகடுகளில் மின்கம்பிகள் பட்டு தீப்பொறி பறந்தன இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை மட்டும் துண்டித்து சென்றனர் இதனால் மின்கம்பம் உடைந்து சாய்ந்து விழுந்த போது அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் உயிர் தப்பினர் இதனால் மின் கம்பம் சாய்ந்து அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் கடைகளின் மீது இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஹோட்டல் மளிகை கடை இ சேவை மையம் ஆகியவற்றிற்கு மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின மெழுகுவர்த்தியை வைத்து அந்த வெளிச்சத்தில் கடை மற்றும் ஹோட்டல் வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது தொடர்ந்து திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வயல்வெளிகளில் இதுபோன்று மின்கம்பங்கள் பழுதடைந்து உடைந்து விடும் நிலையில் உள்ளன இவைகளை உடனடியாக அகற்றி புதிய மின்கம்பங்கள் மாற்ற நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்