சைதாபேட்டை - Saidapet

சென்னை: 19 அரசு பல்கலை.. பட்டமளிப்பு விழா - ஆளுநர் மாளிகை பெருமிதம்

சென்னை: 19 அரசு பல்கலை.. பட்டமளிப்பு விழா - ஆளுநர் மாளிகை பெருமிதம்

அக்டோபர் மாத இறுதிக்குள் 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 20 மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர். என். ரவி, அக்டோபர் 31, 2024 ஆம் தேதிக்குள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்திட அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார். ஆளுநர்-வேந்தர் ஆர். என். ரவி, அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா இனிவரும் ஆண்டுகளில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த செயலூக்கமான அணுகுமுறை மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பட்டப்படிப்புச் சான்றிதழ்களை உடனடியாகப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது மற்றும் அவர்கள் வாய்ப்புகளைத் தாமதமின்றிப் பயன்படுத்தவும் உதவுகிறது. தமிழ்நாடு ஆளுநர் மாளிகை, மாணவர்களை தங்கள் முயற்சிகளில் வெற்றிப் பெற செய்ய மேற்கொண்ட உறுதிப்பாட்டின்படி, 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட அக்டோபர் மாதம் 2024 இறுதிக்குள் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை
சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை - ஜி. கே. வாசன்
Nov 03, 2024, 13:11 IST/அம்பத்தூர்
அம்பத்தூர்

சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை - ஜி. கே. வாசன்

Nov 03, 2024, 13:11 IST
கனமழைக்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் எம். பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலோரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பு தெரிவிக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழையோ கனமழையோ பெய்ய வாய்ப்புண்டு. மழைக்காலங்களில் பெய்யும் மழையால் பல இடங்களில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கியிருப்பதும், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதும், மழைநீரோடு கலந்து வந்து கழிவுநீர் குடிநீரில் கலப்பதும், சாலைகள் பழுதடைவதும், போக்குவரத்து தடைபடுவதும், மக்களின் இயல்பு வாழ்க்கை சிரமத்திற்கு உட்படுவதும் வழக்கமானது. எனவே தமிழக அரசு, மழைக்காலத்தில் சென்னை உள்பட மாநிலத்தில் எங்கு மழை பெய்தாலும் மக்களை, விவசாயத்தை, கால்நடைகளை பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.