காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை: வானிலை மையம்

76பார்த்தது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வடகிழக்கு பருவமழையைப் பொருத்த வரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக். 1 முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில், 138 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 71 மி. மீட்டர். இது இயல்பைவிட 94 சதவீதம் அதிகமாகும். தற்போது தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 280 கி. மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 320 கி. மீட்டர் தொலைவிலும், ஆந்திரப்பிரதேசம், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி. மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 15 கி. மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை வடதமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி