சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி. நகர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அரைமணி நேரமாக பெய்து வரும் மழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், இரவு 10 மணி வரை சென்னை, காஞ்சி, சேலம், வேலூர், தி. மலை, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.