கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ள “காலம் உள்ளவரை கலைஞர்” - நவீன தமிழகத்தின் சிற்பிக்கு வரலாற்று சிறப்புமிக்க நவீன கண்காட்சியகத்தை,
இன்று (10. 6. 2024), திங்கட்கிழமை, காலை 10. 30 மணியளவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.