பெரம்பூர் - Perambur

சொத்து தகராறு: பெண் தற்கொலை

சொத்து தகராறு: பெண் தற்கொலை

கொளத்தூர் ஜி. கே. எம் காலனி 34வது தெருவை சேர்ந்தவர் சங்கீதா (40), இவருக்கு 18 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை என்பவருடன் திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஏழுமலை கார்பென்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா இருக்கும் வீடு அவரது பூர்வீக சொந்த வீடு. அந்த வீட்டின் அருகிலேயே தனித்தனியாக வீடு கட்டி அவரது அப்பா ராஜேந்திரன், அம்மா ராஜேஸ்வரி மற்றும் தம்பி சதீஷ், தங்கை தீபிகா ஆகியோரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சங்கீதா கூடுதலாக சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி அவரது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரும் தருவதாக கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் (செப் 19) சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அன்று மாலை 5 மணி அளவில் பெட்ரூமில் மின்விசிறியில் சேலையால் சங்கீதா தூக்கு போட்டுக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சங்கீதாவை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


சென்னை
Sep 21, 2024, 13:09 IST/எழும்பூர்
எழும்பூர்

சென்னையில் சுய உதவி குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி

Sep 21, 2024, 13:09 IST
சென்னை நுங்கம்பாக்கத்தில் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி தொடங்கியது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இன்று தொடங்கியது. தொடர்ந்து அக். 6-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தினந்தோறும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடத்தப்படும் கண்காட்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களான பட்டு, பருத்தி ஆடைகள், மண்பாண்டப் பொருட்கள், தோல் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், விதவிதமான நவராத்திரி கொலு பொம்மைகள் உள்ளிட்டவை 48 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்படும். இதுதவிர, பார்வையாளர்கள் பாரம்பரிய சுவை மிகுந்த சிறுதானிய உணவுகளை உண்டு களித்திடும் வகையில் உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வார இறுதி நாட்களில் பாரம்பரியமிக்க சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.