சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (செப்.,19) நடைபெற்று வரும் இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை தடை செய்ய கோரி போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்ததால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் இந்துக்கள் சிலர் கொல்லப்பட்டதாக கூறி, டெஸ்ட் போட்டியை தடை செய்ய கோரி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் கடிதம் வழங்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக்கொண்டபோதும், தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.